
சரவாக் மாநில 12ஆவது சட்டமன்றத் தேர்தல் டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெறும் என்று சரவாக் தேர்தல் ஆணையம் அறிவித்ததுள்ளது. ஆகவே தீபகற்ப மலேசியாவில் உள்ள சரவாக் மாநில மக்கள் வாக்களிக்க வருவதை உறுதி செய்ய விமான டிக்கெட்டுகளை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூச்சிங் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கெல்வின் யீ கேட்டுக் கொண்டுள்ளார். வரும் டிசம்பர் 6 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெறும். இம்முறை 82 சரவாக் மாநில சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.



