
4 கோடியே 20 லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட SRC இண்டர்நேஷனல் ஊழல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீதான வழக்கில் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி புத்ரா ஜெயா அப்பீல் நீதிமன்றம் தீர்ப்பை கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்ப்பை ஒத்தி வைக்கக் கோரி நஜிப் துன் ரசாக் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் ஷாஃபி அப்துல்லா முறையீடு செய்துள்ளார். சிங்கப்பூர் செல்லும் நஜிப் துன் ரசாக் அதன் பின்னர் நாடு திரும்புகிறார். அவர் 7 நாட்கள் தன்னை தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட தேதியை தேர்வு செய்யும் படி நீதிமன்றத்தை நஜிப் துன் ரசாக் வழக்கறிஞர்கள் குழு கேட்டுக்கொண்டது. ஆனால் நஜிப் துன் ரசாக் செய்து கொண்ட விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும் வேலையில் டிசம்பர் எட்டாம் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று அப்பீல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. நான்கு கோடி வெள்ளி சம்பந்தப்பட்ட Src இண்டர் நேஷனல் ஊழல் வழக்கில் டத்தோஸ்ரீ நஜிப் 7 குற்றச் சாட்டுகளை எதிர்நோக்கி இருக்கிறார். கடந்த ஆண்டு ஜுலை மாதம் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் டத்தோஸ்ரீ நஜிப் ஒரு குற்றவாளி என்று தீர்ப்பளித்து அவருக்கு 12 ஆண்டு சிறையும் 21 கோடி வெள்ளி அபராதமும் விதித்தது. கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக டத்தோஸ்ரீ நஜிப் அப்பீல் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் இதன் தீர்ப்பு டிசம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று இன்று மீண்டும் உரித்த உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


