34.8 C
Kuala Lumpur
Tuesday, September 29, 2026

Vetri

சட்டத்துறை தலைவருக்கும் இனத்திற்கும் என்ன தொடர்பு? டான்ஸ்ரீ தோமி தோமஸ் கேள்வி

🔥 Views : 42
👁 Reading Now : 33

சட்டத்துறை தலைவருக்கும் இனத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று முன்னாள் சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ தோமி தோமஸ் கேள்வியை எழுப்பியுள்ளார் . நாட்டுக்கு தேவை ஒரு சட்ட ஆலோசகர். இதற்கும் இனத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று அவர் வினவினார். நான் மலாய்க்காரர் இல்லை என்பதற்காக சட்டத்துறை தலைவராக இருக்கக் கூடாது என மக்கள் விரும்பாதது குறித்து அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தேன். பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத் தரப்பில் போதுமான ஆதரவை பெறவில்லை என்றாலும் சட்டத்துறை தலைவராக பணியாற்றிய போது அரசாங்கத்தின் கொள்கையை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். இதனிடையே ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட நஜிப் துன் ரசாக் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டதில் நான் மகிழ்ச்சி அடையவில்லை. சட்டத்தின் கீழ் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles