34.4 C
Kuala Lumpur
Thursday, October 1, 2026

Vetri

32 ஆண்டுகளுக்கு பின்னர் மலேசிய கிண்ணத்தை வென்று கேஎல் சிட்டி புதிய வரலாறு படைத்தது

🔥 Views : 31
👁 Reading Now : 67

நேற்று இரவு புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்ற மலேசியக் கிண்ணப் கிண்ணப் போட்டி இறுதி ஆட்டத்தில் கோலாலம்பூர் சிட்டி குழு 2-0 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த ஜொகூர் ஜெடிதி குழுவை வீழ்த்தி கிண்ணத்தை வென்று சாதனை படைத்தது. விறுவிறுப்பான இறுதிகட்டத்தை 20 ஆயிரம் ரசிகர்கள் நேரில் கண்டு ரசித்தனர். 66 ஆவது நிமிடத்தில் கேஎல் சிட்டி குழுவின் முதல் கோலை ஷாப்ரி யாயா அடித்தார். பின்னர் 74 ஆவது நிமிடத்தில் 2ஆவது கோலை பாவ்லோ ஜோசே அடித்தார். 32 ஆண்டுகளுக்கு பின்னர் மலேசிய கிண்ணத்தை வென்றதால் கேஎல் சிட்டி குழு பெரும் உற்சாகத்தில் இருக்கிறது. ஜொகூர் ஜெடிதி ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் பயிற்றுநர் போஜான் ஹோடாக் வழிகாட்டுதலில் கேஎல் சிட்டி அதிரடி படைத்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles