30 C
Kuala Lumpur
Wednesday, September 30, 2026

Vetri

டாக்டர் இராமசாமி மற்றும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திடம் மன்னிப்பு கோரினார் ம இகா தலைவர் சேதுபதி! 45,000 வெள்ளி இழப்பீடும் செலுத்த உத்தரவு

🔥 Views : 28
👁 Reading Now : 25

பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி மற்றும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தை பற்றி முன் வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த ம இ கா தலைவர் சேதுபதி மணியம் இன்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சேதுபதி மணியம் தனது முகநூலில் டாக்டர் பி இராமசாமி மற்றும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தை பற்றி அவதூறுகளை பரப்பினார். பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் பணம் தவறாக கையாளப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைத்தார். தனக்கு எதிராக அபாண்டமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த சேதுபதி மணியத்திற்கு எதிராக டாக்டர் பி இராமசாமி அவதூறு வழக்கை பினாங்கு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்திற்கு வந்த போது பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மற்றும் டாக்டர் பி இராமசாமி ஆகியோரிடம் சேதுபதி மணியம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இதையடுத்து டாக்டர் இராமசாமிக்கு 45,000 வெள்ளி இழப்பீடாக செலுத்த சேதுபதி ஒப்புக்கொண்டார். எனக்கு எதிராக மேலும் பலர் இதுபோன்ற அவதூறுகளை முன் வைத்துள்ளனர். அவருக்கு எதிராகவும் வழக்குத் தொடுத்து இருப்பதாக டாக்டர் ராமசாமி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles