27.5 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

தாய்மொழிப் பள்ளிகளை மூட வேண்டுமா? இது இனவெறித்தனம்- நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம் – மாண்புமிகு சார்ல்ஸ் முழக்கம்

🔥 Views : 8
👁 Reading Now : 67

நாட்டில், தாய்ப் மொழிப் பள்ளிகளை கட்டம் கட்டமாக ஒழிக்க வேண்டும் என்று பெர்சத்து கட்சி தகவல் பிரிவு தலைவரின் கூற்று இனவெறியை குறிக்கின்றது. மலேசியர்களிடையே மேலும் பிளவை உண்டாக்குகின்றது என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ சாடினார். தங்கள் கலாச்சார அடையாளத்தை இழந்துவிடுவோமோ என்ற பயத்தில் இருக்கும் சீனர்கள் மற்றும் இந்தியர்கள் மத்தியில் இம்மாதிரியான கோரிக்கை மேலும் அச்சத்தை அதிகரிக்கிறது.. மறைமுகமாக இனவெறியை தூண்ட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். இதனிடையே தாய்மொழி பள்ளிகள் விவகாரத்தில் நீதிமன்றம் முடிவு செய்யும் வரை அரசியல்வாதிகள் அமைதியாக இருக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஹினிப் கூறியிருப்பதையும் அவர் சாடினார். இது எங்கள் உரிமை பிரச்சினை. பெற்றோர் உட்பட அனைவரும் பேசுவதற்கு உரிமை இருக்கிறது என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles