28.8 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

உலகையே உலுக்கிய வரும் ஒமிக்ரோன் வைரஸ் 17 நாடுகளில் பரவியுள்ளது

ஒமிக்ரோன் எனும் கொரோனா வைரஸ் குறித்து உலகமே அச்சத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ள இந்த வகை கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. ஒமிக்ரான் கொரோனா வைரஸ் உலக அளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், பல்வேறு நாடுகள் தங்கள் எல்லைகளை மூடி வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங், போட்ஸ்வானா, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஜெர்மனி, நெதர்லாந்து, ,இங்கிலாந்து, இஸ்ரேல், பெல்ஜியம் சுவிட்சர்லாந்து, கனடா, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல், டென்மார்க் மற்றும் செக் குடியரசு நாடுகளில் பரவியுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles