28.8 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

உலக அழகி போட்டிக்கு சென்றவருக்கு கோவிட் 19 நோய்த்தொற்று

பிரபஞ்ச அழகி எனப்படும்மிஸ் யூனிவர்ஸ் போட்டி டிசம்பர் 12-ஆம் தேதி இஸ்ரேலில் நடைபெறுகிறது. உலகில் இருந்து 80 அழகிகள் இஸ்ரேலுக்கு வந்துள்ளனர். தற்போது இஸ்ரேலில் புதிய வகை ஒமிக்ரோன் வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் திட்டமிட்டபடி உலக பிரபஞ்ச அழகி போட்டி நடைபெறும் என்று அந்நாட்டின் சுற்றுலா துறை அமைச்சு தெரிவித்துள்ளது. போட்டியில் பங்கேற்கும் அழகிகள் ஏலாத் நகரில் உள்ள ‘ரெட்னீ’ ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 48 மணி நேரத்துக்கு ஒரு முறை பரிசோதனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்கும் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இது உலக அழகி போட்டியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles