27.6 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

சிலாங்கூர் மாநிலத்தில் நோய்த்தொற்றுக்கு 9,617 பேர் பலி! இந்தியர்கள் 1,285 பேர்

🔥 Views : 8
👁 Reading Now : 30

2020 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு நவம்பர் மாதம் வரை சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு 9,617 பேர் பலியாகியுள்ளனர என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு 66 மரணச் சம்பவங்களும் இவ்வாண்டில் 9,551 சம்பவங்களும் பதிவானதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழ உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் தெரிவித்தார். கோல குபு பாரு உறுப்பினர் லீ கீ ஹியோங் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். இவ்வாண்டு நவம்பர் வரை மரணமுற்ற 9,551 பேரில் 7,833 பேர் மலேசியர்களாவர். அவர்களில் 4,696 பேர் மலாய்க்காரர்கள். 1,800 சீனர்கள் மற்றும் 1,285 இந்தியர்களும் அடங்குவர் என்று அவர் சொன்னார். எஞ்சிய 1,718 மரணச் சம்பவங்கள் அந்நிய நாட்டினர் சம்பந்தப்பட்டவை என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles