27.6 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

கொரோனாவிலிருந்து குணமடைந்தார் நடிகர் கமல்ஹாசன்!

🔥 Views : 8
👁 Reading Now : 69

கொரோனா தொற்றிலிருந்து நடிகர் கமல்ஹாசன் குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அண்மையில் அமெரிக்கா சென்றிருந்தார். சென்னை திரும்பிய அவருக்கு சளி, இருமல் இருந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. நவம்பர் 22 ஆம் தேதி சென்னை ராமசந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இப்போது அவர் முற்றாக குணம் அடைந்து இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles