32.3 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

சரிசமமான நிதி ஒதுக்கீடு எதிரிக்கும் கத்தி கொடுப்பதைப் போன்றது! சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் ஆவேசம்

🔥 Views : 11
👁 Reading Now : 50

அடுத்தாண்டுக்கான சிலாங்கூர் மாநில பட்ஜெட்டில் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சரிசமமான நிதி ஒதுக்கீடு கொடுப்பது தொடர்பில் பக்கத்தான் ஹரப்பானின் சபாக் பெர்ணாம் சட்டமன்ற உறுப்பினர், முஸ்தாய்ன் ஒத்மான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சிலாங்கூர் மாநில அரசின் இந்நடவடிக்கை எதிரிக்கும் உதவுவதைப் போல் உள்ளது. இதில் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீட்டையும் உயர்த்துவதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். இது நம்மை பலி கொடுக்க நாமே எதிரியிடம் கத்தி கொடுப்பதைப் போல் உள்ளது. அதனால் இந்த ஒதுக்கீட்டை பக்கத்தான் ஹரப்பான் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளரிடம் ஒப்படைப்பதுதான் சிறந்தது என்று நான் கருதுகிறேன் என்றார். சிலாங்கூர் மாநில பட்ஜெட்டில் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா 4 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles