
நாடாளுமன்றப் பணியாளர்கள் மத்தியில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாடாளுமன்றதை மூட வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். இந்நோய்த் தொற்றைக் கையாளக் கூடிய கட்டமைப்பும் அனுபவமும் சுகாதார அமைச்சுக்கு உள்ளது. கோவிட்-19 பரிசோதனைகளை அடிக்கடி மேற்கொள்வது மற்றும் நோய்த் தொற்று கண்டவர்களை தனிமைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.



