32.3 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

சிங்கப்பூரில் எச்.எஸ்.ஆர். கூட்டத்திற்கு நஜீப் வரவில்லை

🔥 Views : 9
👁 Reading Now : 40

சிங்கப்பூரில் நடைபெற்ற அதிவிரைவு இரயில் திட்டம் எனப்படும் எச்.எஸ்.ஆர் தொடர்பான மலேசியா-சிங்கப்பூர் தலைவர்களை உட்படுத்தியக் கூட்டத்திற்கு முன்னாள் பிரதமர், டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் வரவில்லை என்று போக்குவரத்து அமைச்சர், டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்தார். சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்குடன் பிரதமர், டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், 3 அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் மட்டுமே இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்களைத் தவிர வெளியுறவு அமைச்சர் டத்தோ சைஃபுடின் அப்துல்லா, அனைத்துலக வாணிபத் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். இக்கூட்டம் தொடர்பான விவரங்களைப் பிரதமர் அமைச்சரவையில் நாளை அறிவிப்பார் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles