
சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி கட்சிகள் நேருக்கு நேர் மோதிக் கொள்ளாது என்று சரவாக் மாநில ஜசெக அறிவிக்கப்பட்டுள்ளது. பக்கத்தான் ஹரப்பான் சார்பில் கெஅடிலான், ஜசெக மற்றும் அமானா கட்சிகள் போட்டியிடும். எந்தவொரு தொகுதிகளில் இந்த கட்சிகள் நேரடியாக மோதிக் கொள்ளாது என்று சரவாக் மாநில ஜசெக தலைவர் சோங் சின் தெரிவித்தார். சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தல் டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெறும் வேளையில் மொத்தம் 82 தொகுதியில் கடுமையான போட்டி ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
