28.8 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஸ் கட்சி போட்டியிடும்

சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஸ் கட்சி போட்டியிடும். ஆனால் எத்தனை தொகுதியில் போட்டியிடும் என்பதை இப்போது வெளியிட முடியாது என்று பாஸ் கட்சி உதவித் தலைவர் இட்ரிஸ் அமாட் தெரிவித்தார். சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தல் டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெறும் வேளையில் டிசம்பர் 8 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் இடம் பெறுகிறது. மொத்தம் 82 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. சரவாக் ஜிபிஎஸ் கூட்டணி மற்றும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி கட்சிகள் இடையே இம்முறை கடுமையான போட்டி ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles