26.4 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

பயங்கரவாதிகள் என்று தவறாக நினைத்து அப்பாவி கிராம மக்கள் 13 பேர் சுட்டுக்கொலை

🔥 Views : 5
👁 Reading Now : 23

பயங்கரவாதிகள் என்று நினைத்து நாகாலாந்தில் பாதுகாப்பு படையினரால் 13 அப்பாவி கிரம மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ சிறப்பு விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் அரசுக்கு எதிராக சில அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். இதில் பயங்கரவாத அமைப்புகளும் அடங்கும். அவர்கள் அடிக்கடி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து நாகாலாந்து மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாகலாந்து மியான்மர் நாட்டு எல்லையை ஒட்டி உள்ளது. இதையடுத்து எல்லைப் பகுதியில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில்ஈடுபட்டு வருகிறார்கள் இந்தநிலையில் நாகாலாந்தில் பயங்கரவாதிகள் என தவறாக நினைத்து கிராம மக்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles