31.1 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

சிலாங்கூர் புத்தக விழாவுக்கு 2 லட்சம் பேர் வருகை புரியலாம்

🔥 Views : 8
👁 Reading Now : 36

ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் 11 நாட்களுக்கு நடைபெறும் சிலாங்கூர் புத்தக விழா சுமார் 2 லட்சம் பேர் வருகை புரியலாம் என்று எதிர்பார்ப்பதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தக விழாவுக்கு நேரில் வருவோர் மற்றும் இணையம் வாயிலாக பங்கு கொள்வோரை இந்த எண்ணிக்கை உள்ளடக்கியிருக்கும் என்றார் அவர். இந்த விழாவுக்கு ஊக்கமூட்டும் வகையில் ஆதரவு கிடைத்துள்ளதை காண முடிகிறது. இங்கு விற்பனையும் அமோகமாக உள்ளது. குறிப்பாக பள்ளி உபகரணங்கள், சமய புத்தகங்கள் மற்றும் இதர பொருள்கள் நன்கு விற்பனையாகின்றன இந்த விழாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு விஷேச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள வேளையில் கோவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கூடல் இடைவெளியும் கடைபிடிக்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles