
மியான்மர் நாட்டின் மக்களாட்சி தேசிய தலைவர் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை வழங்கிய நீதிமன்ற தீர்ப்பால் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை மோசடி எனக்கூறி கடந்த பிப்ரவரி மாதம் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. முக்கியமாக ஆங் சான் சூகி உள்ளிட்ட சில தலைவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்கள். இந்த வழக்கு விசாரணை 8 மாதமாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று ராணுவத்திற்கு எதிராக கருத்துகளை பரப்பியதற்காகவும் கோவிட் விதிமுறைகளை மீறியதற்காகவும் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக அந்நாட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியிருக்கிறது.. ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு கடுமையான கண்டனம் எழுந்துள்ளது.
