
பீர் விற்கும் கோப்பிக் கடைகள் அடுத்தாண்டு ஜனவரி 1 முதல் புதிய உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 840 முதல் 1,320 வெள்ளி வரையிலான வருடாந்திர உரிமக் கட்டணங்கள் செயல்பாட்டு நேரத்தைப் பொறுத்து வணிகங்களுக்கு வசூலிக்கப்படும் என்று சுங்கத்துறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று பெட்டாலிங் ஜெயா கோப்பி கடைகள் சங்கம் தெரிவித்துள்ளது . இந்த புதிய விதிமுறைகள் தொடர்பில் மசீச செயலாளர் சூன் சின் வூன் மற்றும் பக்கத்தான் ஹரப்பானின் புக்கிட் மெர்தாஜம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சிம் கூறுகையில் இது அதிருப்தியை ஏற்படுத்தும் என்று தெரிவித்தனர்.
