
Sop விதிமுறைகளுக்கு உட்பட்டு தைப்பூசத்திற்கு ரத ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். ஆண்டுக்கு ஒருமுறை தமிழ்க் கடவுள் முருகப்பெருமானுக்கு தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தின் சிறப்பே ரத ஊர்வலமும் காவடிகள் தான். அடுத்த ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி தைப்பூசம் கொண்டாட முடியுமா? அதற்கான விதிமுறைகள் என்ன என்று இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். ரத ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை என்று ஒற்றுமை துறை அமைச்சர் ஹலிமா பதில் அளித்துள்ளார். இருப்பினும் எஸ்ஓபி விதிமுறைகளை பின்பற்றி ரத ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். மேலும் விரதம் இருக்கும் பக்தர்கள் காவடிகள் மற்றும் பால்குடங்கள் ஏந்தி முருகப்பெருமானுக்கு காணிக்கை செலுத்த அனுமதி வழங்கப்பட வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார்
