30.1 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

ரத ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை! தைப்பூசம் தொடர்பில் புதிய sop வெளியிடப்படும்

அடுத்த ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி கொண்டாடப்படும் தைப்பூசத்திற்கு ரத ஊர்வலம் அனுமதிக்கப்படவில்லை என்று ஒற்றுமை துறை அமைச்சர் ஹலிமா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். புதிதாக பரவி வரும் ஒமிக்ரோன் வைரஸ் எதிரொலியால் ரத ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் எழுப்பி கேள்விக்கு இவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். சிலாங்கூர், கோலாலம்பூர், பினாங்கு, பேராக், கெடா உட்பட 10 மாநிலங்களை சேர்ந்த இந்து சமய தலைவர்கள், தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் சுகாதார அமைச்சு அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட சந்திப்புக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார். மிக விரைவில் தைப்பூசத்திற்கான புதிய sop விதிமுறைகள் வெளியிடப்படும் என்று அவர் சொன்னார். இவ்வாண்டு பினாங்கு மற்றும் கோலாலம்பூரில் நடைபெற்ற ரத ஊர்வலத்தில் பத்து பேர் மட்டுமே பின் தொடர்ந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles