30.1 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

பீர்’ உரிமம் பெற வேண்டும் என்ற புதிய சட்டம் தேவை இல்லை!

கோப்பிக் கடைகளுக்கு குறிப்பாக ‘பீர்’ விற்கும் உரிமத்திற்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்க வேண்டும் என்ற கொள்கையின் அமலாக்கத்தை ஜொகூர் பெக்கோ சட்டமன்ற உறுப்பினர் எஸ். டாக்டர் ராமக்கிருஷ்ணன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இத்தனை வருடம் இல்லாமல், ஏன் தீடிரென ஒரு புது சட்டம் எதற்கு. மக்கள் கஷ்டங்களை எதிர்கொண்டிருக்கும்போது இதுபோன்ற சட்டங்களை ஏன் அமல்படுத்த வேண்டும் என்று அவர் கேள்வியை எழுப்பினார். பாஸ்’ கட்சியின் துண்டுதலால் அரசாங்கம் இது போன்ற சட்டங்களை கொண்டு வருகிறதா? அனைவரும் ‘கோவிட்’ காரணமாக வியாபாரம் இல்லாமல் கஷ்டங்களை எதிர் நோக்கி கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இதுபோன்ற சட்டங்கள் தேவையா? என்று அவர் கேட்டார். அரசாங்கம் கோவிட் தாக்கம் அதிகமாக இருக்கும் இந்த சூழ்நிலையில் மக்களுக்கு உதவிகள் குறைவாகவே வழங்கியுள்ளது. பொருளாதார ஊக்கம், சலுகைகள், உதவிகளை அரசாங்கம் மேலும் வழங்க வேண்டும். ஆனால், புதிய சட்டங்கள் மூலம் அவர்களின் கஷ்டத்தை அரசாங்கம் அதிகப்படுத்துகிறது. இந்த சட்டம் தேவையற்ற அதிகாரத்துவத்திற்கும் செலவுக்கும் வழிவகுக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles