27.8 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

சக்தி வாய்ந்த ஆசிய நாடுகளில் இந்தியா 4ஆவது இடம்!

சமீபத்தில் உலகிலேயே மிகப்பெரிய வல்லரசு நாடுகள் பட்டியலில் நீண்ட காலமாக முதல் இடத்தில் இருந்த அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சீனா முதல் இடத்திற்கு முன்னேறியது. கொரோனா தொற்றுக் காலத்தில் அனைத்து நாடுகளின் வர்த்தகமும் பாதிக்கப்பட்ட நிலையில் சீனா கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து வேகமாக மீண்டு வந்த நிலையில் உற்பத்தியை அதிகரித்துப் பெரிய அளவிலான வர்த்தகம் மற்றும் ஏற்றுமதியைப் பதிவு செய்து சீனா மிகப்பெரிய உச்சத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் இன்று லோவி இன்ஸ்டிடியூட், ஆசியா பவர் இன்டெக்ஸ் வெளியிட்டு இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்த பட்டியலில் வழக்கம்போல் சீனா முதல் இடத்தில் இருக்கும் நிலையில், சீனாவுடன் போட்டிப்போடும் இந்தியா 4ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டு நேப்பாளம், இலங்கை முன்னேறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles