
ஐரோப்பாவிற்குத் வர்த்தக மற்றும் முதலீட்டு நோக்குடன் கடந்த அக்டோபர் மாதத்தில் மேற்கொண்டப் பயணத்தில் தம்முடன் குடும்பத்தினரையும் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுவதை அனைத்துலக வாணிபத் தொழில்துறை அமைச்சர், டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மறுத்தார். மக்களவையில் இவ்விவகாரம் தொடர்பில் ஆர்.எஸ்.என்.ராயர் (ஜெலுத்தோங்-பக்காத்தான் எம்.பி.)கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அஸ்மின் அலி இதனைத் தெரிவித்தார். அமைச்சின் இலக்கில் ஒவ்வொரு செலவும் நிதி நடைமுறை மற்றும் நெறிமுறைப்படிதான் மேற்கொள்ளப்படும். காரணம் இந்த வர்த்தக இலக்கு அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டு விட்டது என்றார்.
