26.4 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

நோய்த்தொற்றால் மியூசியத்தின் வருமானம் 70% சரிந்தது

🔥 Views : 9
👁 Reading Now : 52

கோவிட் தொற்றுக் காரணத்தால் 2020, 2021ஆம் ஆண்டுகளில் சுற்றுப்பயணிகளின் வருகை குறைந்ததில் மியூசியத்தின் வருமானம் 70 விழுக்காட்டிற்கும் மேல் சரிவுக் கண்டிருப்பதாக சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சர், டத்தோஸ்ரீ நான்சி ஷுக்ரி கவலை தெரிவித்தார். மியூசியத்திற்கு அனைவரும் மீண்டும் வருவதை ஊக்குவிக்க ‘வலுவுடன் திரும்ப வாருங்கள்’ என்ற அமைச்சின் சுலோகம் மியூசியம் துறை ஏற்பாட்டிலானக் கண்காட்சியில் பயன்படுத்தப்படவுள்ளது. இதன் முக்கிய நோக்கம் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறைகள் கோவிட் தொற்றுக்குப் பிறகு திரும்ப மீட்சிப் பெறுவதை உறுதிப்படுத்துவதற்கே ஆகும். நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுவூட்டும் சாத்தியம் கொண்ட பண்பாட்டுச் சுற்றுலாத் தலமாக மியூசியம் விளங்குகிறது என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles