30.1 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

துரோனோ சட்டமன்ற உறுப்பினர் போல் யோங் தற்காப்பு வாதம் புரியும்படி நீதிமன்றம் உத்தரவு

இந்தோனேசிய பணிப்பெண்ணை பாலியல் வன்முறை செய்ததாக பேராக் மாநில துரோனோ சட்டமன்ற உறுப்பினர் போல் யோங் குற்றச்சாட்டை எதிர் நோக்கி இருக்கிறார். தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் தற்காப்பு வாதம் புரியும் படி போல் யோங்கிற்கு ஈப்போ உயர் நீதிமன்ற நீதிபதி அப்துல் வஹாப் இன்று உத்தரவு பிறப்பித்தார். அடுத்த ஆண்டு பிப்ரவரி 15,16 ஆம் தேதியில் இந்த வழக்கு நடைபெறும் என்றும் நீதிபதி அப்துல் வஹாப் தேதியை நிர்ணயித்தார். கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி தொடங்கப்பட்ட இவ்வழக்கின் விசாரணையில் 23 பேர் சாட்சியம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles