26.4 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

குன்னுார் ஹெலிகாப்டர் விபத்து! இந்திய ராணுவ முப்படைத் தலைமை தளபதி, மனைவி உள்பட 13 பேர் உயிரிழப்பு

🔥 Views : 8
👁 Reading Now : 51

தமிழ்நாடு குன்னுார் என்ற இடத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவ முப்படைத் தலைமை தளபதி பி.பின் ராவத், அவரின் மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னுார், வெலிங்டனில் ராணுவ உயர் அதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர். தமிழகத்தின் குன்னூர்- ஊட்டி இடையே மலைப்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது அந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்தது. இந்த விபத்து குறித்து விமானப்படை மற்றும் ராணுவம் தரப்பில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது இந்த விபத்து இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles