27.5 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

தைப்பூசத்திற்கான SOP இறுதிவடிவம் காணப்படவில்லை; ஒற்றுமைத்துறை அமைச்சு திடீர் பல்டி!

🔥 Views : 11
👁 Reading Now : 33

அடுத்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி தைப்பூச கொண்டாட்டத்திற்கான SOP இன்னமும் இறுதி வடிவம் காணப்படவில்லை என்று தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரோன் வைரஸ் பரவக்கூடும் என்ற அச்சத்தினால் உத்தேச SOPயில் தைப்பூச இரத ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை என்று நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் எழுப்பிய கேள்விக்கு ஒற்றுமை துறை அமைச்சர் ஹலிமா பதில் அளித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்பு இந்திய தலைவர்கள் கடுமையாக சாடியதைத் தொடர்ந்து அந்த அமைச்சு இப்போது இந்த விவகாரத்தில் திடீர் பல்ட்டி அடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உத்தேச SOPயை தொற்று நிர்வாக தொழில்நுட்ப செயல் திட்ட குழுமம் அங்கீகரிக்க வேண்டியிருப்பதாக அமைச்சு கூறியுள்ளது. மேலும் தொற்று நிர்வாக சிறப்புக் குழுவும் அங்கீகரிக்க வேண்டுமென அமைச்சு தெரிவித்துள்ளது. மூன்று குழுக்களின் நிர்வாக குழு கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே SOPயின் முழு விவரங்கள் குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles