27.8 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

தற்கொலை செய்ய முயன்றவர்களின் எண்ணிக்கையில் குளறுபடிகள் ஏன்?

நாட்டில் தற்கொலை செய்ய முயன்றவர்களில் எத்தனை பேர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது என்று நாடாளுமன்றத்தில் நான் கேள்வி எழுப்பி உள்ளேன். ஆனால் என் கேள்விக்கு இரண்டு வெவ்வேறு அமைச்சுகள் தெரிவித்த பதில்கள் குளறுபடியை ஏற்படுத்துகிறது பினாங்கு பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் முதல் கோவிட் பெருந்தொற்று காலத்தில் தற்கொலை செய்ய முயன்ற 409 பேர் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் கொண்டுவரப்படவில்லை என்று மகளிர், குடும்பம் ,சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ரினா ஹருண் எனது கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதே வேளையில் கடந்த ஆண்டு முதல் இவ்வாண்டு ஜூன் மாதம் வரை தற்கொலை செய்ய முயன்ற 398 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டதாக உள்துறை அமைச்சு எழுத்து பூர்வமான பதில் வழங்கியுள்ளது என்று கஸ்தூரி பட்டு நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles