
சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலில் கிரியான் சட்டமன்ற தொகுதியில் பெர்சத்து உறுப்பினர் அலி பியூ போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். கடந்த இரு தேர்தலில் கெஅடிலான் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அணி தாவினார். இப்போது பெர்சத்து கட்சியில் இருக்கிறார். இவர் போட்டியிடுவதை சரவாக் மாநில ஜிபிஎஸ் கட்சி கடுமையாக சாடியது. இந்நிலையில் நேற்று இவர் வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். கட்டொழுங்கு இல்லாத அரசியல்வாதிக்கு இது ஒரு நல்ல பாடம் என்று கெஅடிலான் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ நசுத்தியோன் தெரிவித்தார். இவர் கட்சிக்கு துரோகம் இழைத்தவர் என்று அவர் சாடினார்.
