
சர்ச்சைக்குரிய 1 எம்டிபிக்கு சொந்தமான பணம் பெற்றுக் கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பேங்க் நெகாரா முன்னாள் கவர்னர் ஸெத்தி கணவர் தாவ்பிக் மீது விசாரணை நடத்தும்படி போலீஸ் துறைக்கு அட்டர்னி ஜெனரல் அலுவலகம் உத்தரவு பிறப்பித்தது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்பில் போலீஸ் துறை தனது விசாரணை அறிக்கையை அக்டோபர் 21 ஆம் தேதி சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்ததாக உள்துறை துணை அமைச்சர் இஸ்மாயில் முகமட் சைட் தெரிவித்தார்.
