
‘1எம்டிபி’ ஊழல் வழக்கு தொடர்பில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீதான 7 குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியதில் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் 21 கோடி வெள்ளி அபராதமும் விதித்து கடந்த ஆண்டு ஜுலை 28 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நஜிப் துன் ரசாக் செய்த மேல் முறையீட்டு மனுவை நேற்று முன்தினம் அப்பீல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் வழி நஜிப்புக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் விதித்த 12 ஆண்டு சிறை மற்றும் 21 கோடி வெள்ளி அபராதம் நிலை நிறுத்தப்படுகிறது என்று அப்பீல் நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மேல் முறையீட்டு மனு மீது நீதிமன்றத்தின் தீர்ப்பு அம்னோ உச்சமன்றத்திற்கு பெரும் வேதனை அளிக்கிறது என்று அதன் செயலாளர் டத்தோ அமாட் மஸ்லான் தெரிவித்தார்.
