25.7 C
Kuala Lumpur
Monday, September 28, 2026

Vetri

பெயர் பலகையில் வங்காளதேச எழுத்து மன்னிப்பு கோரினார் சட்டமன்ற உறுப்பினர் ஜூவாரியா

🔥 Views : 17
👁 Reading Now : 39

கோலசிலாங்கூர் வட்டாரம் முழுவதும் வைக்கப்பட்டிருக்கும் கெஅடிலான் கட்சியின் பெயர் பலகையில் வங்காளதேசம் எழுத்து இடம் பெற்றது தொடர்பில் புக்கிட் மெலாவாத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜூவாரியா மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். இந்த பெயர் பலகையில் தவறு நிகழ்ந்துள்ளது. இது உடனடியாக திருத்தம் செய்யப்படும் என்றார் அவர். இந்த சம்பவத்திற்காக கோல சிலாங்கூர் கெஅடிலான் கட்சி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது. மேலும் இந்தப் பெயர் பலகையில் தமிழ் எழுத்தும் இடம்பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வங்காளதேச எழுத்து உள்ளது. ஆனால் தமிழ் எழுத்து இடங பெறவில்லை என்று நேற்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது இதுபற்றி கருத்துரைத்த ஜூவாரியா இந்த பெயர் பலகை சரி செய்யப்படும். நாங்கள் அனைத்து இன மக்களின் உணர்வுக்கு மதிப்பு அளிக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles