
உலகத் தொழிலாளர் தங்குமிடப் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப மலேசியாவின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர் தங்குமிடத்தை மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ சரவணன் நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இதன்வழி மனிதவள அமைச்சு தொழிலாளர் பாதுகாப்பு, நலன், பணியமர்த்துவதில் முறையாக செயல்படுத்தும் என்று SJ Holdings Sdn. Bhd. தெரிவித்தது. 10 ஏக்கர் நிலப்பரப்பில் 8 அடுக்ககங்கள் கொண்ட தொழிலாளர் தங்குமிடம் கட்டப்பட்டுள்ளது. அதில் 8,000 தொழ்லாளர்கள் தங்கக் கூடிய வசதிகளும், குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் உட்பட அதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜாலான் கெலுலி 11 என்ற இடத்தில் கூடுதலாக 8,000 தொழிலாளர் தங்குமிடத்தை உருவாக்க SJ Holdingss திட்டமிட்டுள்ளது. ,4 நிலப்பரப்பில் 16,000 தொழிலாளர்களுக்காக தங்குமிட வசதியை அந்நிறுவனம் உருவாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
