30.1 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

405 பேருக்கு நிலப்பட்டா? இதில் இந்தியர் ஒருவர் மட்டும்தானா? பேரா ஜசெக தினகரன் கேள்வி

பேராக் மஞ்சோங் மாவட்ட நில அலுவலகம் வழங்கிய வீட்டு நிலப்பட்டா ஒரே ஒரு இந்தியருக்கு மட்டுமே வழங்கப்பட்டது குறித்து தனது கடுமையான கண்டனத்தை பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் பேராக் மாநில முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் இன் இந்திய நலப் பிரிவு சிறப்பு அதிகாரி தினகரன் கோவிந்தசாமி தெரிவித்தார். நாடு சுதந்திரம் அடைந்து ஒரே மலேசியா ஒரே குடும்பம் என்ற கருப்பொருளை தவிடுபொடியாக்கிய நிலையை உருவாக்கிய மாவட்ட நில அலுவலகம் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்றார். கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தமது நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் 48 எட்டு இந்திய குடும்பங்கள் இன்னமும் அரசாங்க நிலத்தில் வாழ்கின்றனர். இவர்களுக்கு நிலப்பட்டா வழங்க கோரி முன்னாள் மாவட்ட ஆட்சியாளரையும் சந்தித்து மகஜர் வழங்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் ஆட்சி மாற்றத்தின் காரணமாக அது நிலுவையில் நின்றது. இருப்பினும் 405 பேருக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரே ஒரு இந்தியர் இடம்பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று அவர் சொன்னார். இங்குள்ள இந்திய மாநகர மன்ற உறுப்பினர்கள், கிராமிய தலைவர்கள் குறிப்பாக மாநில தலைவர்கள் இது தொடர்பில் வாயை திறக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles