
நாட்டிலுள்ள பெரியவர்களில் 97.2 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 27 லட்சத்து 46 ஆயிரத்து 838 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 98.6 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 30 லட்சத்து 67 ஆயிரத்து 954 பேர் குறைந்த து ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனிடையே 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 90.1 விழுக்காட்டினர் அல்லது 28 லட்சத்து 36 ஆயிரத்து 326 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்ற வேளையில் 86.7 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 29 ஆயிரத்து 900 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
