
பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான, உத்தரபிரதேச மாநில வாரணாசியில், கங்கை கரைகளுடன் விஸ்வநாதர் கோவிலை இணைக்கும் வகையில், 600 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள விஸ்வநாதர் கோவில் வளாகத்தை, பிரதமர் மோடி வரும் 13 ஆம் தேதி திறந்து வைக்கிறார். இது, பிரதமர் மோடியின் கனவு திட்டமாக கருதப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், கங்கையின் லலிதா படித் துறையில் இருந்து 320 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் கொண்ட நடைபாதை, பிரமாண்ட அருங்காட்சியகம், நுாலகம், பக்தர்கள் தங்கும் மையம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


