
1எம்டிபி தொடர்புடைய எஸ்ஆ சி இண்டர்நேஷனல் ஊழல் வழக்கில் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் குற்றவாளி என்று அப்பீல் நீதிமன்றம் தீர்ப்பை மறு உறுதி படுத்தினாலும் டத்தோஸ்ரீ நஜிப் இன்னும் புகழ்பெற்ற வராக விளங்குகிறார் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். நம்பிக்கை மோசடி, அதிகார துஷ்பிரயோகம், பணமோசடி குற்றச்சாட்டுகளுக்கான தண்டனை நிலைப்படுத்தப்பட்டப் போதிலும் அவரது புகழ் சீர்குலையவில்லை என்றுதான் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சிறைக்குச் செல்வதைத் தவிர்க்க நஜிப் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக நிலைபெற்றுத் தமது அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்வதுதான் சிறப்பாகும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
