
நாட்டில் நேற்று வரை 2 கோடியே 27 லட்சத்து 52 ஆயிரத்து 434 பேர் அல்லது 97.2 விழுக்காட்டுப் பெரியவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். மேலும் 98.6 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 30 லட்சத்து 71 ஆயிரத்து 502 பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், 12 முதல் 17 வயதுக்குட்பட்ட இளையோரில் 28 லட்சத்து 38 ஆயிரத்து 110 பேர் ஓரு டோஸ் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 27 லட்சத்து 32 ஆயிரத்து 740 பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்பட்டுள்ளது.
