33.1 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார் பிரதமர் மோடி

🔥 Views : 6
👁 Reading Now : 65

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற காசி விசுவநாதர் ஆலயத்தின் புதுப்பிக்கப்பட்ட வளாகத்தை பிரதமர் மோடி இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். இதனால் வாரணாசி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. … பிரதமரின் சொந்தத் தொகுதியில் அமைந்துள்ள காசி விசுவநாதர் ஆலயத்தின் வளாகம் 600 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் கனவாக கருதப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் கங்கை நதிக்கரையில் இருந்து கோவிலை இணைக்கும் வகையில் லலிதா படித்துறையில் இருந்து விசுவநாதர் கோயில் வரை 320 மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும் உடைய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட அருங்காட்சியகம், நூலகம், பக்தர்கள் தங்கும் மையம் ஆகியவையும் இதில் அமைக்கப்பட்டுள்ளன. கால பைரவர் கோயிலில் வழிபட்ட பின்னர் பிரதமர் மோடி காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles