
இம்மாதம் 7 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் மலேசிய குடும்ப உச்சவரம்பு விலைத் திட்ட அமலாக்கத்தின் போது பொருள்களின் விலையைக் கண்காணிக்கும் பணியில் 260 அமலாக்க அதிகாரிகளை உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் சிலாங்கூர் மாநில பிரிவு ஈடுபடுத்தி உள்ளது. இந்த சோதனை நடவடிக்கையின் போது சில்லறை வியாபாரிகள் சிறப்பு இளஞ்சிவப்பு விலைப்பட்டியல் முறையாக பயன்படுத்தப்படுவதும் உறுதி செய்யப்படும் என்று உணவுத் துறை மற்றும் பயனீட்டாளர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி கூறினார்



