27.8 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை இந்தியாவுக்கு பெற்றுத் தந்தது பெருமை தருகிறது! ஹர்னாஸ் கவூர் கண்ணீர் பேட்டி

இஸ்ரேல் எய்லட் நகரில் பிரபஞ்ச அழகிக்கான போட்டி நேற்று நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80 அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்காக பங்கேற்றனர். ,இந்தியா சார்பில் பங்கேற்ற இளம்பெண் ஹர்னாஸ் கவுர் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இந்தியா சார்பில் 1994 ஆம் ஆண்டில் சுஷ்மிதா சென் மற்றும் 2000 ஆம் ஆண்டில் லாரா தத்தா ஆகியோர் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றிருந்தார். அதன்பிறகு 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியப் பெண் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்தது பெருமை தருகிறது என்று பிரபஞ்ச உலக அழகி ஹர்னாஸ் கவூர் தெரிவித்தார். மதிப்பு மிக்க இந்த மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை 20 ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு மீண்டும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles