27.8 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

இந்தியர்களுக்கு வழங்கப்படும், சலுகைகள் மற்றும் கல்வி வாய்ப்பு பற்றி ஏம்ஸ்ட் (Aimst) பல்கலைக்கழகம் அறிவிக்க வேண்டும்.

ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கான வருடாந்திர ஒதுக்கீடு அடுத்த ஆண்டு தொடக்கம் 20 மில்லியன் வெள்ளி 25 மில்லியன் வெற்றியாக அதிகரிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்தது. கோலாலம்பூரில் மஇகாவின் 75-வது ஆண்டு பேராளர் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இவ்வாறு கூறினார். ஏம்ஸ்ட் பல்கலைக்கழகம் என்பது எம்.ஐ.சி யின் மஜு கல்வி மேம்பாட்டு நிறுவனத்தால் (MIED) நிறுவப்பட்ட ஒரு தனியார் பல்கலைக்கழகம் ஆகும். இந்த பல்கலைக்கழகம் மருத்துவம், அறிவியல் மற்றும் தொழில் துறை கல்வி ஆகியவற்றில் மலேசிய இந்திய மாணவர்களுக்கு மூன்றாம் நிலை கல்வியை வழங்குவதற்காக கட்டப்பட்டது. ஆனால், சீனர்கள் தான் முழுமையான கல்வி கட்டணம் செலுத்தி, இங்கு படிக்கிறார்கள். மாலாய்காரர்களுக்கு அரசாங்கமே கல்வி உதவிதொகை கொடுத்து படிக்க வைக்கிறது. நம் இந்திய மாணவர்களுக்கு தான் இதை பற்றி ஒன்றுமே தெரிவதில்லை. அப்படி தெரிந்தாலும், போதிய பணவசதி இல்லாமல், படிப்பதில்லை. இதனால், ‘ஏம்ஸ்ட்’ பல்கலைக்கழகம் இந்திய மாணவர்களுக்காக என்னென்ன சலுகைகள் உள்ளது, என்னென்ன கல்வி வாய்ப்புகள் வழங்குகிறது என்பதை தெரிவிக்க வேண்டும். இந்த பல்கலைக்கழகங்கள் கட்டுவதற்காக பல இடங்களில் இருந்து நிதிகளை திரட்டியது நம் இந்தியர்கள்தான். ஆனால், நம் இந்தியர்களுக்கே இங்கு கல்விகான இடங்கள் வழங்கப்படவில்லை என்று ஜொகூர் பெக்கோ சட்டமன்ற உறுப்பினர். டாக்டர் எஸ் இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles