27.8 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

12 பொருள்கள் விலை இறக்கம் காண்கின்றன- பயனீட்டாளர் விவகார அமைச்சு அறிவிப்பு

மலேசிய குடும்ப உச்ச வரம்பு விலைத் திட்டம் நேற்று அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில் நாட்டில் 12 வகையான பொருள்களின் விலை இறக்கம் கண்டு வருகிறது என்று உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு அறிவித்துள்ளது. அன்றாட தேவைக்கான அத்தியாவசியப் பொருள்கள் சந்தையில் தாராளமாக கிடைப்பது மற்றும் அப்பொருள்கள் சில்லரை வியாபாரிகளுக்கு குறைந்த விலையில் கிடைப்பது ஆகிய காரணங்களால் அப்பொருள்கள் விலை இறக்கம் காணும் என்று அமைச்சின் அமலாக்க பிரிவின்பிரிவு துணை இயக்குநர் அரிஸ் மாமாட் கூறினார். முன்பு கோழிகள் அதிக விலையில் விற்கப்பட்டு வந்தன. ஆனால் மலேசிய குடும்ப உச்ச வரம்பு விலைத் திட்டத்தின் கீழ் கோழிகளுக்கான விலையை கிலோ ஒன்றுக்கு 9 வெள்ளி .30 காசு நிர்ணயித்துள்ள போதிலும் சந்தையில் அவை 7 வெள்ளி 90 காசு என்ற விலையில் மட்டுமே விற்கப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles