30.1 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

வங்கிகளுக்கு இடையே 1 வெள்ளி சேவை கட்டணத்தை திரும்பக் கொண்டு வர வேண்டாம்!

வங்கிகளுக்கு இடையே ஒரு வெள்ளி சேவை கட்டணம் வரும் பிப்ரவரி 1 முதல் மீண்டும் தொடங்கும் என்ற அறிவிப்பு மறுபறிசீலனை செய்ய வேண்டும் என்று ஜொகூர் ஜசெக கிளைத் தலைவர் சந்திரசேகரன் ஆறுமுகம் கேட்டுக் கொண்டார் வங்கிகளுக் கிடையேயான ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான 1 வெள்ளி கட்டணம் பிப்ரவரி 1 முதல் அமுல் படுத்தும் நேக்கம் ஏற்புடையாது அல்ல. மேபேங்க், சிஐஎம்பி, சிட்டி பேங்க் மற்றும் எச்எஸ்பிசி ஆகிய வங்கிகள் இந்த விவகாரத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டிருந்தாலும் இப்போதைக்கு இது வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், பலர் வேலையில்லாமல் இருப்பதும் மற்றும் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். 1 வெள்ளி சேவை கட்டணத்தை மீண்டும் கொண்டு வர இது சரியான தருணம் அல்ல அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles