
செமினி ஆற்றில் டீசல் எண்ணெய் வாடை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு மையத்தில் பணிகள் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக பெட்டாலிங், உலு லங்காட், சிப்பாங், புத்ரா ஜெயா மற்றும் கோல லங்காட் ஆகிய மாவட்டங்களில் உள்ள 463 இடங்களில் நீர் விநியோகத் தடை ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீர் தூய்மைக்கேடு ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிவதற்காக சிலாங்கூர் நிர்வாக வாரியம் செமினி ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் சோதனை மேற்கொண்டு வருவதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.
