33.1 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

ஐஜேஎன்னில் அனுமதிக்கப்பட்டார் துன் டாக்டர் மகாதீர் முகமது!

🔥 Views : 5
👁 Reading Now : 31

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது நேற்று இரவு 7.00 மணிக்கு கோலாலம்பூரில் உள்ள தேசிய இருதய கழகத்தில் சேர்க்கப்பட்டதாக ஐஜேஎன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துன் டாக்டர் மகாதீருக்கு முழுமையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் அவரது உடல்நிலை கவனிக்கப்படும். ஆகையால் அடுத்த சில தினங்கள் அவர் தொடர்ந்து தேசிய இருதய கழகத்தில் சிகிச்சை பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 96 வயதான துன் டாக்டர் மகாதீர் முகமது தற்போது பெர்ஜூவாங் கட்சியை வழிநடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles