30.1 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

பந்திங்கில் மனவளர்ச்சி குன்றிய சிறார்கள் இல்லத்திற்கு சிலாங்கூர் அரசு 45,800 வெள்ளி நிதியுதவி

பந்திங்கில் செயல்பட்டு வரும் மனவளர்ச்சி குன்றிய சிறார்கள் பராமரிப்பு இல்லத்திற்கு சிலாங்கூர் மாநில அரசு நேற்று 45,800 வெள்ளி மானியம் வழங்கி உதவி புரிந்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று பரவியது முதல் இந்த காப்பகத்தை நடத்துவதில் பொருளாதார ரீதியாக சிரமத்தை எதிர்நோக்கி வந்தது என்று அதன் தலைவர் எஸ். முருகையா ஜீவா தெரிவித்தார். இந்த காப்பகத்தின் அன்றாட நடவடிக்கைகள் சீராக நடைபெறுவதற்கு உதவிய சிலாங்கூர் மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழ உறுப்பினர் வீ கணபதி ராவ் நேற்று 45,800 வெற்றிக்கான காசோலையை நேரடியாக இல்ல பொறுப்பாளர்களிடம் வழங்கினார். இந்த இல்லத்தில் 78 வளர்ச்சி குன்றிய சிறார்கள் மற்றும் 28 பணியாளர்கள் உள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles