
தென் ஆப்பிரிக்காவில் பரவிய ஒமிக்ரோன் வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரோன் வைரஸ் குறுகிய காலத்தில் பல்வேறு நாடுகளுக்கும் பரவி உள்ளது. குறிப்பாக இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 93 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருக்கிறார்கள். பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதையடுத்து கொரோனா பெருந்தொற்று விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் ஒமிக்ரோன் வைரசுக்கு எதிராக தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகள் குறைந்த அளவிலேயே செயல்திறன் மிக்கதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மீண்டும் கொரோனா அலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று 2024-ஆம் ஆண்டு வரை நீடிக்கலாம் என்று கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
