
சிலாங்கூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ள நிலவரத்தை சிலாங்கூர் மாநில அரசு அணுக்கமாக கண்காணித்து வருவதோடு தேவை ஏற்படும் பட்சத்தில் மேலும் அதிகமான துயர் துடைப்பு மையங்களைத் திறப்பதற்கும் தயார் நிலையில் உள்ளது. டீம் சிலாங்கூர் தொண்டூரிய அமைப்பு மற்றும் சிலாங்கூர் தன்னார்வலர் இயக்கம் ஆகியவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
